மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்

0 812

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தேவர் பக்த பேரவையினரை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை, மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி, கடந்த மாதம் 20ம் தேதி தேவர் பக்த பேரவை சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் மதுரை ரயில் நிலையம் முன்பு திரண்ட 100க்கும் மேற்பட்ட தேவர் பக்த பேரவையினர், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியாதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments