தமிழகத்தில் காங்., தலைவர் ராகுல் காந்தி - மு.க.ஸ்டாலின் இணைந்து இன்று தேர்தல் பிரச்சாரம்

0 1151

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி இன்று பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரிக்கு செல்கிறார்.

இதற்காக கல்லூரி வளாகத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்காக கல்லூரி வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டு 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. நெல்லை சரக டி.ஐ.ஜி.கபில்குமார் சரத்கார் தலைமையில் 1700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராகுல் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் நகரில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை தேர்தல் விதிமீறல் எனக் கூறி நேற்று நகராட்சி நிர்வாகம் அகற்றிய நிலையில் தற்போது பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் மற்றும் மேடையில் மட்டுமே பேனர்கள் மற்றும் கொடிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments