இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் விலகல்

0 439

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் ((Stephen Constantine)) விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் AFC ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி, திங்கள் கிழமை நடந்த போட்டியில் பஹ்ரைன் அணியை எதிர்கொண்டது. போட்டியை சமன் செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில், இப்போட்டியில் இந்திய அணி தோற்றது. இதன் மூலம் ஆசியக்கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.

இதை அடுத்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் அறிவித்துள்ளார். இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதாகவும், அவர்களை எண்ணி பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments