வெற்றிக்கு பல தந்தைகள், தோல்வி மட்டும் அனாதை என அமைச்சர் நிதின் கட்கரி விமர்சனம்

0 770

கட்சி வெற்றி பெற்று விட்டால் அதற்கான புகழைப் பெறுவதற்கு பலர் போட்டி போடுவதாகவும், தோற்று விட்டால் அதற்கு பொறுப்பேற்க ஒருவரும் முன் வருவதில்லை என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கூட்டுறவு வங்கி கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய நிதின் கட்கரி, தேர்தலில் கட்சிக்கு வெற்றி கிடைத்து விட்டால் அதற்கான புகழைப் பெற பந்தயமே நடக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால் தோற்று விட்டால் ஒருவர், மற்றொருவரை நோக்கி கை காட்டுவார்கள் என்று சாடினார். வெற்றிக்கு பல தந்தைகள் இருப்பார்கள், ஆனால் தோல்வி மட்டும் அனாதையாகவே இருக்கும் என்று அவர் விமர்சித்தார். வெற்றியோ, தோல்வியோ தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments