பா.ஜ.க பிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை - நிதின் கட்கரி

0 630

2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்றால் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஒரு சிலர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த நிதின் கட்கரி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளராவதற்கு வாய்ப்பே இல்லை என்றார். மேலும பிரதமர் வேட்பாளராகும் ஆசையும் தனக்கு கிடையாது என்றும் கட்கரி தெரிவித்தார். கங்கை நதியை தூய்மைப்படுத்தி அதனை பொதுப் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது தான் தனது லட்சியம் என்று அவர் கூறினார்.

மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளையும் தரமான சாலைகள் மூலம் இணைக்க தான் உழைத்து வருவதாகவும் கட்கரி தெரிவித்தார். தற்போது தான் இருக்கும் நிலையையே தனக்கு போதுமானதாக கருதுவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments