விழா மேடையில் திடீரென மயங்கினார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 1698

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்தார்.

அந்த மாநிலத்தின் அகமதுநகரில் உள்ள விவசாய கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், மாணவர்களுடன் அரைமணி நேரம் கலந்துரையாடினார். நிகழ்ச்சி முடிந்து தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, கட்கரிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மயக்கம் வருவது போல இருந்தது.

உடலில் சர்க்கரை சத்து குறைப்பாட்டால் அவர் கிறங்கியதை கண்டதும், அருகில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், சாக்லேட் ஒன்றை கொடுத்தார், அதை வாயில் இட்டபடியே, தேசிய கீதத்திற்காக கட்கரி எழுந்து நின்றார். ஆனால் அப்போது அவர் திடீரென சுயநினைவு இழந்து அப்படியே சரிந்தார். அவரை ஆளுநரும், அதிகாரிகளும் தாங்கி பிடித்து நாற்காலியில் அமர வைத்தனர்.

பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கட்கரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் உடல் நலம் தேறிய கட்கரி, சர்க்கரை சத்து குறைபாட்டால் தமக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், இப்போது உடல்நலத்துடன் இருப்பதாகவும் டுவிட்டரின் பதிவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments