மத்தியில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி: சந்திரபாபு நாயுடு

0 1164

மத்தியில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தீபாவளியையொட்டி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பொதுமக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயல்படும் மத்திய அரசு, ஆந்திரத்தின் வடக்குக் கடலோரப் பகுதிகளில் டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யவில்லை என்றும், மாநில அரசே அவர்களின் மறுவாழ்வுக்கான நிதியுதவியைச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கண்களில் மகிழ்ச்சியைக் காணும் நாளே தனக்குத் தீபாவளி என்றும் குறிப்பிட்டுள்ளார். தீபங்களின் வரிசையான தீபாவளி நாள் ஆந்திர மாநிலத்துக்கு வரிசையாக வெற்றிகளைக் கொண்டுவரும் எனத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments