பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது காலணி வீசிய இளைஞர், அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த தொண்டர்கள்

0 247

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது காலணி வீசிய கல்லூரி மாணவரை தொண்டர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஒருங்கிணைந்த ஜனதா தளத்தில் இளைஞர் மாநாடு பாட்னாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் நிதிஷ் குமார் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி இளைஞர் ஒருவர் காலணியை வீசினார். ஆனால் காலணியானது அவர் மீது படவில்லை. இதனால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது. இதை அடுத்து அந்த இளைஞரைப் பிடித்த கட்சி தொண்டர்கள், அவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த மாணவர் தன்னை உயர் சாதியைச் சேர்ந்தவர் என்று கூறியதுடன், இட ஒதுக்கீட்டால் தமக்கு வேலை வாய்ப்பு பறிபோனதால் நிதிஷ் குமார் மீது காலணி வீசியதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments