2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
BIG STORIES
அபிநய்யின் அறியா மறுபக்கம்..! " சந்தோஷமாக கொண்டாடு மச்சி " சோசியல் மீடியாவில் வைரலாகும் விஜயலட்சுமியின் உருக்கமான பதிவு
Nov 12, 2025 02:28 PM
238
அபிநய்யின் அறியா மறுபக்கம்..! " சந்தோஷமாக கொண்டாடு மச்சி "... சோசியல் மீடியாவில் வைரலாகும் விஜயலட்சுமியின் உருக்கமான பதிவு
நடிகர் அபிநய் சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று அவரது வீட்டிலேயே உயிரிழந்தார். இந்நிலையில் சென்னை 28, அஞ்சாதே போன்ற படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி, அபிநய் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், சென்னை 28 திரைப்படத்திற்குப் பின் நான் சாட்டிலைட் ரேடியோ விளம்பரத்தில் நடிகர் அபிநய்யுடன் இணைந்து நடித்தேன். அதில் தமிழ் தம்பதியினராக நடித்தோம். அதில், கல்யாணம் ஆனதும் அப்பெண் வட மாநிலம் சென்று அங்கு புரியாத மொழியால் வீட்டைப் பிரிந்த வருத்தத்துடனும், கணவனுடன் விலகலுடனும் இருக்கிறாள். அப்படியான ஓரிரவில் ரேடியோவிலிருந்து பிரமாதமான தமிழ்ப்பாடல் ஒன்று ஒலிக்கும். அதைக் கேட்ட பின் கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும்.
அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பு டெல்லியில் 4 நாள்கள் நடந்தது. இப்போது இருக்கும் விஜயலட்சுமி அல்ல அப்போது நான். அறிமுகமில்லாதவர்களைப் பார்த்தால் பயம், தனியாகச் செல்வதில் தயக்கம், கூச்ச சுபாவம் என்று இருந்தேன்.
டெல்லியில் நான் தங்க அப்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டது. அப்போது, திடீரென என் அறையில் தங்க அபிநய் வந்தார். அப்போது, நான் ஃபெரோஸை (கணவர்) காதலித்துக்கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ஆணுடன் ஒரே அறையில் தனியாகத் தங்குவதை ஃபெரோஸிடம் சொல்லவில்லை. பதற்றத்துடன் அதை நான் கையாண்டேன்.
ஆனால், அபிநய் ஒரு ஜெண்டில்மேன்.. தொழில் மீது ஒழுக்கம் கொண்டவர். ஒவ்வொரு ஃபிரேமிலும் தன் உழைப்பைப் போடுவார். படப்பிடிப்பு முடிந்து இரவு அப்பார்ட்மெண்ட் திரும்பும்போது நான் அறைக்குள் சென்றுவிடுவேன். அவர் அறையில் இருக்கிறாரா என என கதவைத் திறந்து பார்க்கும்போதெல்லாம், அவர் தனியாக அமர்ந்து மதுவை அருந்தி கொண்டிருப்பர். ஒரு முழு பாட்டிலையும் குடித்து முடித்து, தன்னை மறந்து கிடப்பார்.
ஒரு இளம் நடிகர் இப்படித் தனியாக குடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் மிகவும் கனமாக இருக்கும். அப்படியொரு நாள் இரவில், அவர் குடித்துக்கொண்டிருந்தபோது நான் அவரைப் பார்ததும், ‘குடிக்கிறியா?’ எனக் கேட்டார். ‘எனக்கு அந்த பழக்கம் இல்லை’ என்றதும் ஜூஸ் குடி என்றார். அதற்குள் என்ன இருக்குமோ என்கிற எண்ணத்தில் வேண்டாம் என மறுத்துவிட்டு, கேட்கவே கூடாது என நினைத்த கேள்வியைக் கேட்டேன்.
ஏன் இப்படி குடிக்கிறீங்க...? நீ இளமையாக இருக்கிறாய், வெற்றிகரமானவன், நன்றாக இருக்கிறாய். ஏன் இந்தப் பழக்கம்?” என்றேன்.அபிநய் தன் தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள், தன் அம்மா, அழுத்தங்கள், வலிகள், தனிமை குறித்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பேசினார்.
அவர் இதயத்திலிருந்து எல்லாம் வெளியேறட்டும் என நான் எதுவும் சொல்லாமல் கவனமாக முழுமையாகக் கேட்டேன். படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திலிருந்து விடைபெறும்போது, அபிநய் என்னிடம், “நன்றி விஜி. இதற்கு முன் யாரும் என் வலிகளைக் குறித்து இவ்வளவு கேட்டதில்லை. கடவுள் இப்படியும் சில பெண்களைப் படைக்கிறாரா? ஒருவேளை, உனக்கு ட்வின் சிஸ்டர் இருந்தால் எனக்கு தெரியப்படுத்து” என்றார். நான் வெடித்துச் சிரித்து, அவரைக் கட்டியணைத்து வழியனுப்பினேன். அதுவே, நாங்கள் சந்தித்துக்கொண்ட கடைசி சந்திப்பு.
அதன்பின், இப்போது அவர் இறந்துவிட்டார் எனக் கேள்விப்பட்டதும் எனக்கு அழுகை வருகிறது. ஆனால், இது வருத்ததிற்காக அல்ல. மகிழ்ச்சியாக அவருடைய போராட்டம் முடிவிற்கு வந்ததை நினைத்து.. இறுதியாக தன் அமைதியைக் கண்டடைந்துவிட்டார்.
அமைதியாக இளைப்பாருங்கள் (rest in peace) என்று நான் சொல்ல மாட்டேன். ”சந்தோஷமாகக் கொண்டாடு, மச்சி” என்றுதான் சொல்வேன். ஏனென்றால், இம்முறை தன் வலிகளை நினைத்து அவர் குடிக்க மாட்டார். அவர் சுதந்திரத்திற்காக சியர்ஸ் சொல்வார்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu