RECENT NEWS

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

BIG STORIES

உடல் உறுப்புகள் தானம்..! சான்றிதழ் சாப்பாடு போடுமா ? தேவை ஒரு வேலை வாய்ப்பு..! இரட்டை குழந்தைகளின் தாய் ஆதங்கம்

Sep 26, 2025 07:15 AM

188

உடல் உறுப்புகள் தானம்..! சான்றிதழ் சாப்பாடு போடுமா ? தேவை ஒரு வேலை வாய்ப்பு..! இரட்டை குழந்தைகளின் தாய் ஆதங்கம்

உடல் உறுப்புகள் தானம்..! சான்றிதழ் சாப்பாடு போடுமா ? தேவை ஒரு வேலை வாய்ப்பு..! இரட்டை குழந்தைகளின் தாய் ஆதங்கம்

கடந்த ஆண்டு கணவனை சாலை விபத்தில் பறிகொடுத்த கர்ப்பிணி ஒருவர் , கணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்த நிலையில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுடன் தவிப்பதாகவும், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்

பிஞ்சுக்குழந்தையின் கைகளில் ரோஜா இதழ்களை கொடுத்து இவர் தான் உங்க அப்பா.. என்று கண்ணீர் மல்க அந்த பெண்ணின் கரங்கள் தனது கணவரின் புகைப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய காட்சிகள் பலரது கண்களை கலங்க வைத்தது

அந்த பெண் யார் ? இரட்டை குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறார்? உடல் உறுப்பு தானத்தை பாராட்டி சான்றிதழ் வழங்கிய அரசு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிதி உதவியோ அல்லது வேலை வாய்ப்போ வழங்கி இருக்கலாமே என்பது பலரது ஆதங்கமாக இருந்தது.

செத்தும் கொடுத்த சிதகாதி போல சாலை விபத்தில் உயிரிழப்பதற்கு முன்பாக தனது உடல் உறுப்புகளை தானமாக எழுதிக்கொடுத்த இளைஞர் பழனிவேல் தான் அந்த பெண்ணின் கணவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் பகுதியை சேர்ந்த பழனிவேலு, கச்சராபாளையம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஐஸ்வர்யாவை காதலித்து 2024 ஆம் வருடம் ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார்.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்த பழனிவேல் அங்கு வாடகை வீட்டில் குடியேறினார்.

ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்த போது பிப்ரவரி மாதம் 2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீட்டிலிருந்து சென்னைக்கு மனைவி ஐஸ்வர்யாவை ரயில் ஏற்றிவிட்டு , பழனிவேல் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு வந்துள்ளார்.

கிளாம்பாக்கம் பகுதியில் விபத்தில் சிக்கிய பழனிவேல் தலைக்கவசம் அணியாததால் மூளைச்சவடைந்ததாக கூறப்படுகின்றது. கணவர் விருப்பபடியே உடல் உறுப்புகளை தானம் கொடுக்கவும், ஐஸ்வர்யாவும் சம்மதித்தார்

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஐஸ்வர்யாவுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று , பெண் குழந்தை ஒன்று என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தாலுகா அலுவலகங்களிலும் தனக்கு ஆதரவற்ற விதவை கலப்புத் திருமண சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்தும் இது வரை கிடைக்கவில்லை என்கிறார் ஐஸ்வர்யா

கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் தன் தாய் வீட்டில் ஐஸ்வர்யாவை அனுமதிக்காத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தன் கணவரின் வீட்டிலும் சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் பகுதியில் உள்ள தன் கணவரின் அக்கா ஜீவா வீட்டிலும் தற்போது இரண்டு கைக்குழந்தையுடன் தத்தளித்து வருகிறார் ஐஸ்வர்யா

“நான் ஒரு பட்டதாரி , என் கணவர் சாலை விபத்தில் இறந்த நிலையில் அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. எனக்கு முறையாக கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைத்தாலே யாரையும் எதிர்பார்க்காமல் எனது இரு குழந்தைகளையும் காப்பாற்றி விடுவேன் என்கிறார் ஐஸ்வர்யா

ஐஸ்வர்யாவிற்கும் குழந்தைகளுக்கும் உள்ளூர் நல்லுள்ளங்கள் உதவ முன்வந்தாலும், அரசு வழங்கும் ஒரு வேலை வாய்ப்பு அத்தனை வேதனைகளையும் கடந்து சமூகத்தில் அவரும் மேல் ஏறி வர உதவும்.

அதே நேரத்தில் சாராயம் குடித்து பலியானவர்களுக்கே 10 லட்சம் நிதி உதவி வழங்கும் போது உடல் உறுப்புக்களை தானம் செய்வோரின் குடும்பத்தையும், தக்க நிதி உதவியுடன் அரசு கவுரவிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது..!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies