RECENT NEWS

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

Jun 13, 2025

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

Jun 13, 2025

முகப்பு

“தமிழ்நாடு அரசு இதை செய்யலைன்னா குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்கும்”- அதிர்ச்சி காரணங்கள்!

Apr 30, 2025 02:33 AM

173

“தமிழ்நாடு அரசு இதை செய்யலைன்னா குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்கும்”- அதிர்ச்சி காரணங்கள்!

“தமிழ்நாடு அரசு இதை செய்யலைன்னா குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்கும்”- அதிர்ச்சி காரணங்கள்!

தமிழ்நாட்டில் கொலைக்குற்றங்களைவிட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணங்கள் என்னென்ன?

அனைத்து புகார்கள் மீது எஃப்.ஐ.ஆர்கள் பதிவுசெய்து நடவடிக்கை எடுப்பதால் அதிகமாக தெரிகின்றது என சொல்லப்படுவது உண்மையா? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

சமீபத்தில் வெளியான தேசிய ஆவணக்காப்பகத்தின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளை காட்டிலும் 2024 ஆம் ஆண்டில் குறைந்து உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2022 ஆம் ஆண்டில்

ஆயிரத்து 597 கொலைகளும், 2023 ஆம் ஆண்டில் ஆயிரத்து 958 கொலைகளும் நடந்துள்ள நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் ஆயிரத்து 488 ஆக குறைந்துள்ளது, என தகவல் வெளியாகியுள்ளது.

அதுவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு, 3 ஆயிரத்து 84 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், 2024 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது. இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக மட்டுமே ஆயிரத்து 885 வழக்குகள் பதிவாகியுள்ளன.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2023 ஆம் ஆண்டில் 406 ஆக பதிவாகிய நிலையில், 2024 ஆம் ஆண்டில் 471 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், கடந்த 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2022 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 968 போக்சோ வழக்குகளும்,

2023 ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 581 போக்சோ வழக்குகளும் பதிவாகியிருந்தன. கடந்த 2024 ஆம் ஆண்டில், 6 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கூறும்போது...

மேலும், கேரளாவில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக 5 கோடியிலிருந்து 7 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ராஜஸ்தானில் 6 கோடி ரூபாய்வரை நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 51 லட்ச ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி, மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பிறகு ஒதுக்கப்படும் தொகை, மிக மிக குறைவாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஜுவனைல் போலீஸ் யூனிட் என்றே தனியாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அப்படி தனி யூனிட் எதுவும் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள காவல்நிலையங்களில், சைல்டு வெல்ஃபர் போலீஸ் ஆஃபிஸர்கள் இருப்பதாக கூறுகிறார்களே தவிர, அவர்கள் முழுமையாக செயல்படுவதில்லை. அதாவது, அடிஷனல் பணியாக இருப்பதால் அவர்களால் வேகத்துடன் செயல்படமுடியவில்லை.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், குழந்தைகள் கடத்தி விற்பதை தடுக்கும் சட்டம், சிறார் நீதி சட்டம் என கிட்ட 12 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த போலீஸாருக்கே போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள்.

மேலும், குழந்தைகள் தொடர்பான புகார்களை அணுகும்போது போலீஸார், யூனிஃபார்மில் செல்லாமல் சாதாரண உடையில் சென்று குழந்தை நேயத்துடன் அணுகி, விசாரிக்கவேண்டும். ஆனால், போலீஸாரோ வெவ்வேறு குற்ற வழக்குகளை விசாரித்துவிட்டு, அப்படியே குழந்தைகளின் வழக்குகளையும் விசாரிக்கச் செல்வதால் அதே யூனிஃபார்முடன் அதே மனநிலையில் சென்று விசாரிக்கிறார்கள். இதுவே, குழந்தைகளுக்கு எதிரான அநீதிதான். அப்படியிருக்க, காவல்நிலையங்களில் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர் புகார்கள் என தனி தனியாக இருப்பதுபோல் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க தனி யூனிட் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தொடங்கபட்டு பல ஆண்டுகள் ஆகியும் அரசியல் காரணங்களால் செயல்படாமல் உள்ளது. போக்சோ புகார்கள், ஆர்.டி.இ எனப்படும் கட்டாய கல்வி சட்டம், குழந்தைத்திருமண தடுப்பு சட்டம் இளம் சிறார் நீதிச்சட்டம் உள்ளிட்டவற்றை கண்காணிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுத்தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழ்ந்துள்ளது.

ஒருவழியாக, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான புதிய நியமனம் செய்ய வேண்டி, ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கென தனி வெப்சைட் கூட இல்லை. அதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை.

குழந்தைகள்- பெற்றோர்கள் வந்து புகார் கொடுக்கும் வகையிலான கட்டமைப்பும் இல்லை. எனவே, முழு கட்டமைப்புகொண்ட, கவுன்சிலிங் செண்டர் கொண்ட, தலைவர்கள்- உறுப்பினர்கள் உட்காரும் வகையில், குழந்தைகளின் வழக்கிற்காக வாதாடும் வழக்கறிஞர்களைக்கொண்ட தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

242 பேரில் ஒருவன்.. பறக்கும் விமானத்தில் குதித்து உயிர் தப்பினார்..! அந்த பொண்ணு தவறவிட்டு தப்பிருச்சி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies