ஒரே மாதிரியான மதிப்பெண்.. ஒரே மாதிரியான கையெழுத்து.. 12ஆம் வகுப்பு தேர்வில் முறைகேடு.. ஆக்சன் எடுத்த சி.பி.சி.ஐ.டி
மதுரையில் கடந்த ஆண்டு நடந்த + 2 தேர்வில் 2 மாணவர்களின்விடைத்தாள்கள் ஒரே கையெழுத்துடன் இருந்து இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் பெற்றது தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் என 8 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பழங்காநத்தம் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணவர்களின் கணிதம், வேதியியல், இயற்பியல் விடைத்தாள்களில் முறைகேடு நடந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் பணம் கொடுத்து விடைத்தாளை மாற்றி வைத்தது உறுதியானதால் 8 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments