பேரன், பேத்திகளை வைத்து தேர்தல் அலுவலகம் திறந்த சௌமியா
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி குமாரசாமிப் பேட்டையில் தனது தேர்தல் அலுவலகத்தை பெயரன், பேத்திகளை வைத்து திறந்து வைத்து இனிப்பு வழங்கினார்.
தருமபுரி தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக போட்டியிடும் தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், தொகுதி பிரச்னைகள் தனக்கு நன்கு தெரியும் என்பதால் அதனை தீர்க்க பாடுபடுவேன் என கூறினார்.
Comments