தமிழ்நாட்டி தேர்தலையொட்டி அனல் பறகும் பிரச்சாரம்....
திருச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா, புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் வாக்குசேகரித்தார்...
கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வீரட்டகரம், எரவளம், அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பகுதிகளில் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது போதிய பேருந்து வசதி இல்லை என்று எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
திருச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ், தனது தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதியில் தரைக்கடை, காய்கறி கடை வியாபாரிகளிடம் நிரந்தர கடைகள் கட்டித் தருவதாக கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு, மாப்படுகை கிராமத்தில் பிரச்சாரத்தை துவங்கி பொட்டவெளி, ஆடிய பிள்ளையார் கோவில் தெரு, திருவிழந்தூர், பரிமளா ரங்கநாதர் கோவில் மேலவீதி, வடக்கு வீதி, சன்னதி தெரு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
வீடு வீடாகச் சென்றும் துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் செய்யாறு வீரம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அவருடன் செய்யாறு எம்எல்ஏ ஜோதியும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Comments