தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த நவேதயா பள்ளி தொடங்கப்படும்: அண்ணாமலை
கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமது சூறாவளி பிரச்சாரத்தை பல்லடம் பகுதிக்கு உட்பட்ட மாதப்பூரில் தொடங்கினார்.
கோவை மற்றும் திருப்பூரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதி அளித்தார்.
மாதப்பூரை தொடர்ந்து பொங்கலூர், காட்டூர் உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்த அண்ணாமலை, தான் வெற்றி பெற்றால், மத்திய அரசின் 10 ஆயிரம் கோடி நிதி உதவியுடன் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
174 ரூபாயாக இருந்த நூறு நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை பிரதமர் மோடி 319 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, இந்த தொகை விரைவில் ஐநூறு ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
Comments