தேசிய நெடுஞ்சாலையில் நாய் திடீரென குறுக்கே வந்ததால் லாரி - பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாய் குறுக்கே வந்ததால், கண்டெய்னர் லாரியும் அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
ஒசூர் நோக்கி சென்ற கார், அழகுபாவி என்னுமிடத்தில் நாய் குறுக்கே வந்ததால் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி கார் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டபோது, அதன் பின்னால் வந்த அரசு பேருந்து, லாரி மீது அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.
Comments