அடுக்குமாடிக் கட்டடத்தில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீவிபத்து - 9 பேர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நம்பள்ளி பசார்காட்டில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
நான்கு மாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த கார் பழுதுநீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீப்பொறியால், முதல் தளத்தில் இருந்த ரசாயனக் கிடங்கில் தீப்பிடித்தது.
அங்கிருந்த ரசாயன பேரல்கள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததில், மேல் தளங்களில் இருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குடியிருப்புகளில் இருந்து 21 பேரை பத்திரமாக மீட்டனர்.
முதல் தளத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருள்களால்தான் பெரும் தீவிபத்து நேர்ந்தாக தீயணைப்புத் துறை இயக்குநர் நாகி ரெட்டி தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் சந்திரசேகர ராவ், உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments