நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து வெளியேற்றும் போராட்டத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து வெளியேற்றும் போராட்டத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நீட் தேர்வு என்பது திமுகவின் பிரச்சனை கிடையாது என்றும் ஒட்டுமொத்த மாணவர்களின் பிரச்சனை என்றும் கூறினார்.
6 வருடங்களில் 22 மாணவர்கள் நீட் தேர்வினால் தமிழகத்தில் உயிரிழந்து இருக்கிறார்கள் என்று கூறிய அவர், சில போராட்டங்களில் கால தாமதம் ஏற்படலாம்; ஆனால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
Comments