இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதை புத்தகம் வெளியிடுவதைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

0 2020

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தொடர்பான கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது சுயசரிதை புத்தகம் வெளியிடுவதை திரும்பப் பெறுவதாக தற்போதைய தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

தான் இஸ்ரோ தலைவராவதைத் தடுக்க சிவன் முயன்றதாக எந்தக் கட்டத்திலும் கூறவில்லை என்று கூறியுள்ள சோம்நாத், தனது சுயசரிதை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது புத்தகத்தை பதிப்பாளர் சில பிரதிகளை வெளியிட்டிருக்கலாம் எனக் கூறிய சோம்நாத், சர்ச்சைகளைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், டாக்டர் சிவன் தொடர்ந்து இஸ்ரோவின் ஆலோசகராக இருந்து வருவதால், எதிர்கால நலன்களுக்காக அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments