சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அகதிகள் வெளியேறுமாறு பாக். அரசு உத்தரவு

0 1071

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து லட்சக்கணக்கானோர் பாகிஸ்தானில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

தற்கொலைப்படை தாக்குதல்களும், குற்றச் சம்பவங்களும் அதிகரித்ததற்கு ஆப்கான் அகதிகள் தான் காரணம் என குற்றம்சாட்டிய பாகிஸ்தான் அரசு, நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் சுமார் 22 லட்சம் ஆப்கானியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

வெளியேறாதவர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவர் எனவும் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments