பற்பசை, சோப்புகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.135 கோடி மதிப்புள்ள 200 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - 9 பேர் கைது

0 2028
பற்பசை, சோப்புகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.135 கோடி மதிப்புள்ள 200 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - 9 பேர் கைது

மும்பையில் பற்பசை, சோப்பு மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்த முயன்ற 135 கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ போதைப் பொருளை போலீசார் கைப்பற்றினர்.

தெற்கு மும்பையின் கெத்வாடி பகுதியில் உள்ள ஹோட்டலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது காலணி, அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொகைகன் போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன் புனே அருகே மிடகுல்வாடி என்ற இடத்தில் இயங்கி வந்த ஆய்வகத்தில் இருந்து 200 கிலோ அல்பிரசோலம் என்ற போதைப் பொருளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 135 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 வெளிநாட்டவர் உள்பட 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments