கழுத்தை அறுத்துக் கொண்ட கொலைகார காதல் சிறுவனை விரட்டிப் பிடித்த போலீசார்..! சொன்னது என்ன ? பரபரப்பு வீடியோ

0 2810

நெல்லை பேண்ஸி ஸ்டோரில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட சிறுவனை விரட்டிப்பிடித்த நிலையில் கழுத்தில் காயத்துடன் காணப்பட்ட அந்த சிறுவன், தன்னை தூக்கிலிடும் படியும், அடித்துக் கொல்லும்படியும் போலீசாரிடம் கெஞ்சிய வீடியோக்கள் வெளியாகி உள்ளது

நெல்லை பேன்ஸி கடை பெண் ஊழியர் கொலை வழக்கில் போலீசாரால் விரட்டிச்சென்று பிடிக்கப்பட்ட 17 வயது சிறுவன் இவர் தான்..!

நெல்லை டவுன் கீழ ரத வீதியில் உள்ள ராஜம் பேன்ஸி ஸ்டோரில் வேலைப்பார்த்து வந்த சந்தியா என்ற இளம் பெண் கொலை வழக்கில் அதே கடையில் வேலைபார்த்து வந்த 17 வயது சிறுவனை போலீசார் தேடிவந்தனர். கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உறவினர்கள் கொலையாளியை கைது செய்யக்கோரியும் கொலையான பெண்ணின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த அந்த சிறுவன் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய நிலையில் அவனை விரட்டிச்சென்று போலீசார் மடக்கிப்பிடித்தனர். போலீசாரிடம் சிக்கியதும் தன்னை தூக்கிலிடுமாறும், அவள் இல்லாமல் வாழ மாட்டேன்... பேசி பார்த்துட்டேன்.. கெஞ்சி பார்த்துட்டேன்... அவ மாட்டேனுட்டா.. என்று முனு முனுத்த அந்த சிறுவன், அவ மாமா பையன் எவனோ வந்துட்டான்.... என்னைய லவ் பண்ணமாட்டேனுட்டா என்று கூறினார்

கழுத்தில் காயம் காணப்பட்ட நிலையில் தன்னை அடிச்சி கொல்லுங்க என்ற அந்த சிறுவன் அவளை அறுத்த கத்தியால் தனது கழுத்தை அருத்துக் கொண்டதாக தெரிவித்தார் , அவளை கொன்னுட்டேன் ... தப்பு பன்னிட்டேன்.. என்னை நைட்டு தூக்குல போட்டுறுங்க என்றார்

அதற்கு அருகில் நின்ற உதவி ஆய்வாளரோ என்னையும் தான் ஒருத்தி வேணான்னு போயிட்டா... நான் என்ன கொலையா பன்னினேன் ? எஸ்.ஐ யாக வந்து நிற்கலையா ? என்று ஆறுதல் கூறினார்

நைட்டு தூக்கில போடுங்க என்று சொல்லிக் கொண்டே இருந்த அந்த சிறுவனிடம், நைட் ஆக இன்னும் டைம் இருக்கு, தூக்குமேடை பார்க்கனும், கயத்தாறுக்கு போகனும்... கட்ட பொம்மன தூக்கில போட்ட இடத்தை பார்க்கனும் என்று கலாய்க்க, அப்படீன்னா அடிச்சி கொன்னுருங்க என்று சீரியசாக பேசினான் அந்த சிறுவன்..!

கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர், 17 வயது சிறுவன் என்பதால் போலீசார் அவரை அடிக்காமல் ஆறுதல் சொல்லி பத்திரமாக அங்கிருந்து அழைத்து வந்து கழுத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்து அவனிடம் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments