தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.. !!

தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பக்கத்து வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
பாலசந்துரு- சுபாஸ்ரீ தம்பதியரின் ஒன்றரை வயது மகன் தர்ஷன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
இதனால், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தாய் சுபாஸ்ரீ சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது தர்ஷன், பக்கத்து வீட்டில் தண்ணீர் நிரம்பியிருந்த பெரிய வாளிக்குள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக, அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச் சென்ற நிலையில், மேல்சிகிச்சைக்காக திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு, பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் போது குழந்தைக்கு உயிர் இருந்ததாகவும், அங்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் சுபாஸ்ரீ குற்றஞ்சாட்டி உள்ளார்.
Comments