மொராக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000 -ஆக உயர்வு..!

0 1227

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3வது நாளாக நீடிக்கிறது.

வெள்ளிக்கிழமை மாலை அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேவேளையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், வீடு மற்றும் உடைமைகளை இழந்ததால் இரவு நேரத்தில் சாலையில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இரவில் கடும் பனிப்பொழிவு மற்றும் பகலில் கடும் வெப்பம் காணப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வு அமைப்பினர் உடைகள் மற்றும் உணவு கொடுத்து உதவி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments