ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ

0 2339

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த 2-ம் தேதி ஆதித்யா எல்-1' விண்கலத்தை சுமந்து கொண்டு சென்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், விண்கலம் 296 கிமீ x 71767 கிமீ சுற்றுப்பாதையில் இயங்கி வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மொரீஷியஸ், பெங்களூரு, மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் இந்த செயல்பாட்டின் போது செயற்கைக்கோளைக் கண்காணித்தன. 15ந்தேதி அதிகாலை 2 மணிக்கு அடுத்த சுற்றுப்பாதை அதிகரிப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments