ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் அருந்ததியினர் குறித்து சர்ச்சைப் பேச்சு.. போலீஸ் விசாரணைக்கு செப்டம்பர் 11-ஆம் தேதி ஆஜராகிறார் சீமான்.. !!

அருந்ததியினர் சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் போலீஸ் விசாரணைக்கு செப்டம்பர் 11-ஆம் தேதி ஆஜராவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அருந்ததியர் சமூகத்தினர் குறித்து சீமான் பேசியது சர்ச்சையானது.
இது தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
விருத்தாசலம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், திங்கள்கிழமை ஆஜராவதாகவும், நடிகை வழக்கில் இன்று ஆஜராக வளரசரவாக்கம் போலீஸார் அனுப்பிய சம்மனுக்கு 12ஆம் தேதி ஆஜராவதாகவும் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments