ஜி 20 மாநாட்டிற்காக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து ஆணை வெளியிட்ட டெல்லி அரசு...!

ஜி 20 மாநாட்டுக்காக டெல்லி அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அனைத்து வகையான வர்த்தக சரக்கு வாகனங்கள், அண்டை மாநிலங்களின் பேருந்துகள், டெல்லி நகரப் பேருந்துகள், மாநாடு நடைபெறும் பைரன் ரோடு , புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
7ம் தேதி நள்ளிரவு முதல் 10ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும். காய்கறிகள், பால், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய அனுமதி சீட்டு பெற்று டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி நகரம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரப்பணிகளுக்கு செல்லும் வாகனங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்லும் வாகனங்கள் டெல்லி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் அனுமதிக்கப்படுவார்கள். டாக்சிகளுக்கு மாநாடு முடியும் வரை டெல்லி நகருக்குள் வரவும் பயணிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Comments