உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என சாமியார் வலியுறுத்தல்... 10.ரூ சீப்பு இருந்தால் நானே சீவிக் கொள்வேன் - உதயநிதி ஸ்டாலின்

0 2108

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் போதவில்லை என்றால் வெகுமதியை அதிகப்படுத்துவதாக உத்தரப்பிரதேச சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு சனாதன தர்மமே காரணம் என தெரிவித்துள்ள சாமியார், 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்திய உதயநிதியை மன்னிக்க முடியாது என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தனது பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது தலைக்கு 10 கோடி ரூபாய் எதற்கு? 10 ரூபாய் சீப்பு இருந்தால் தானே சீவிக் கொள்வேன் என உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மிரட்டலுக்கு அஞ்சவோ, கவலைப்படவோ மாட்டேன் என்றும் உதயநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments