பிறந்து 9 நாட்களில் நடந்ததாக சொன்ன குட்டி போதகரின் தந்தை திடீர் மரணம்..! மறுப்பு வீடியோ வெளியிட்ட பின்னணி

0 3306

பிறந்து 9 நாட்களிலேயே தான் எழுந்து நடந்ததாக, சென்னையில் நடந்த ஜெபக்கூட்டம் ஒன்றில், போதகம் செய்ததால் சர்ச்சைக்குள்ளான சிறுவனின் தந்தை திடீரென மரணம் அடைந்த நிலையில், தான் வாய்தவறி சொல்லி விட்டதாக அந்த குட்டிபோதகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தான் பிறந்த 9 நாட்களிலேயே எழுந்து நடக்க ஆரம்பித்ததோடு, தனக்கான அனைத்து வேலைகளையும் தானே செய்ததாகவும் ஜெபக்கூட்டத்தில் தெரிவித்த குட்டி போதகர் ஜோயல் இம்மானுவேல்..இவர் தான்..!

சென்னை டி.பி சத்திரத்தை சேர்ந்த மாந்த்ரீகவாதி ஆறுமுகம் என்பவரின் மகன் தான் இந்த குட்டிப்போதகர் ஜோயல் இம்மானுவேல். மாந்திரீக தொழிலை விட்டு தனது பெயரை ஆறுமுகம் தாமஸ் என்று மாற்றிக் கொண்டு சென்னையில் வியாசர்பாடி, தண்டையார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜெபக்கூட்டம் நடத்திவந்தார். தனது ஜெபக்கூட்டத்திற்கு வரும் மக்களை கவர்வதற்காக அவரது 10 வயது மகன் ஜோயல் இம்மானுவேலை களத்தில் இறக்கியதாக கூறப்படுகின்றது

இந்த நிலையில் தான் தண்டையார் பேட்டையில் நடந்த ஜெபக்கூட்டத்தில் தான் சொல்வதை எல்லாம் வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம், குட்டிப்போதகர் ஜோயல் இம்மானுவேல், தான் பிறக்கும் போது 5 கிலோ எடை இருந்ததாகவும், பிறந்து 9 நாட்களில் எழுந்து நடக்க ஆரம்பித்ததாக கதை அளந்து விட்ட வீடியோ வெளியானது...

குட்டி போதகரின் இந்த வாய்ஜாலம் மிக்க போதகம் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது. இதற்கிடையே எதிர்பாராதவிதமாக ஜோயல் இம்மானுவேலின் தந்தை ஆறுமுகன் தாமஸ் உயிரிழந்ததார். அவரது வீட்டுக்குச்சென்ற போதகர்கள் சிறுவன் ஜோயல் இம்மானுவேலுக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்..

இதையடுத்து இயல்பு நிலைக்கு திரும்பிய சிறுவன் ஜோயல் இம்மானுவேல், 9 மாதங்களில் எழுந்து நடந்ததாக கூறுவதற்கு பதில் வாய்தவறி 9 நாட்களில் எழுந்து நடந்ததாக சொல்லிவிட்டதாக மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments