சென்னையிலிருந்து மதுரை வரை அ.தி.மு.க.வினர் தொடர் ஜோதி ஓட்டம்
மதுரையில் மாநாட்டை ஒட்டி சென்னையிலிருந்து தொடர் ஜோதி ஓட்டத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ராயபேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்கியுள்ள தொடர் ஓட்டம், மாநாடு நடக்கும் 20ஆம் தேதி மதுரையை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சீருடை அணிந்த 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஜோதியை ஏந்தி ஓடினர்.
5 கிலோ மீட்டருக்கு ஒருவர் என மாறி மாறி ஜோதியை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. சாலை வழியாக செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய ஊர்களுக்குள் ஜோதி எடுத்து செல்லப்படுகிறது.
20ஆம் தேதி மாநாட்டுப் பந்தலில் ஜோதி மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments