பெண்கள் உலகக் கோப்பையில் , பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி

0 2455

பெண்கள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி, பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


சிட்னி நகரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்- அவுட்டில் ஏழுக்கு-ஆறு என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட திரைகளில் போட்டியை கண்டுகளித்த உள்ளூர் ரசிகர்கள், முதல்முறையாக ஆஸ்திரேலியப் பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியதை, ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments