செங்கல்பட்டில் சாலையைக் கடக்க காத்திருந்தவர்கள் மீது மோதிய டிப்பர் லாரி.. சக்கரத்தில் சிக்கி பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு.. !!

0 6689

செங்கல்பட்டு அருகே டிப்பர் லாரி ஒன்று சாலையைக் கடப்பதற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொத்தேரி அருகே ஜி.எஸ்.டி சாலையில் இந்த சம்பவம் நடந்தது. இருசக்கர வாகனங்களில் வந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர், ஒரு பெண் உட்பட 4 பேர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய லாரி சாலையோரம் இருந்த மின் கம்பம், மரங்கள் ஆகியவற்றின் மீது மோதிவிட்டு பின், சாலை நடுவிலுள்ள தடுப்பின் மீதும் இடித்து நின்றது.

தூக்க கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் லாரி ஓட்டுநர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். சாலையை கடப்பதற்கு நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments