சிவன் விருப்பமின்றி பிரபஞ்சத்தில் ஏதும் நடக்காது.. சாதுக்களும் முனிவர்களும் உருவாக்கிய நாடு தான் இந்தியா என ஆளுநர் பேச்சு..

திருவண்ணாமலையில் சாதுக்கள் இடையே தமிழில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பிரபஞ்சத்தில் சிவனின் விருப்பமின்றி எதுவும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஆன்மீக பூமி என்று கூறியுள்ள ஆளுநர், சாதுக்களும் முனிவர்களும் உருவாக்கிய நாடு தான் இந்தியா என்றும் தெரிவித்துள்ளார்.
சாதுக்களுக்கு தமது கையால் உணவு பரிமாறிய ஆளுநர், திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலமும் வந்தார்.
Comments