மது போதையில் அரிசிக் கடைக்குச் சென்று குட்கா கேட்ட நபர்.. இல்லை என்றதால் பெண் உரிமையாளரை தாக்கியதாக புகார்.. !!

சென்னை செங்குன்றத்தில் குட்கா இல்லை என்று கூறிய அரிசிக் கடை பெண் உரிமையாளரை தாக்கிய மது போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம் அருகே விளங்காடுபாக்கம் மல்லிமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி. வீட்டிற்கு அருகிலேயே இவர் நடத்தி வரும் அரிசிக் கடைக்கு சென்ற அஜய் என்ற நபர் போதையில் குட்கா கேட்டதாக கூறப்படுகிறது.
அரிசி கடையில் போதைப் பொருட்கள் எப்படி விற்கப்படும் என்று கேட்ட வளர்மதியையும், கடையில் உடன் இருந்த அவரது கணவரையும் தாக்கியதுடன், கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த வளர்மதியின் 17 வயது மகன், தாய் தந்தை தாக்கப்படுவதை பார்த்து கீழே கிடைந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து அஜயை தாக்கியதாக சொல்லப்படுகிறது. சம்பவம் பற்றி அறிந்து அங்கு சென்ற போலீசார் அஜயை பிடித்துச் சென்றனர்.
அஜயின் தாக்குதலுக்கு ஆளான வளர்மதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்காப்புக்காக அஜயை தாக்கிய தங்கள் மகனையும் போலீசார் பிடித்துச் சென்றதாக வளர்மதியின் கணவர் கூறியுள்ளார்.
Comments