அபுதாபியில் ஆன்லைன் உணவு டெலிவரி தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க சிறப்பு வசதி.. குளிரூட்டப்பட்ட குடில்கள் சாலையோரம் அமைப்பு.. !!

0 1785

ஐக்கிய அரபு அமீரகத்தில் உச்சகட்ட வெப்பம் காணப்படுவதால், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் குளிரூட்டப்பட்ட குடில்கள் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் 10 மணி நேர ஷிப்டில் பணியாற்றும் தொழிலாளர்கள், கடும் வெயிலை சமாளிக்க, இந்த குடிலுக்கு சென்று ஓய்வு எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த குடிலில் குடிநீர், செல்போன் ரீசார்ஜ் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை மேலும் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments