சீனாவின் வடக்கு மாகாணங்களில் கனமழை.. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அவதி.. !!

சீனாவின் வட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
ஹுபே மாகாணத்தில் வெள்ளத்தில் பழுதாகி நின்ற பேருந்தில் சிக்கிக்கொண்ட 50 பயணிகளை ஜன்னல் கண்ணாடியை உடைத்து மீட்பு குழுவினர் மீட்டனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்பவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
காலநிலை மாற்றத்தை தொடர்ந்து பருவம் தவறி பெய்துவரும் மழையால் சீனாவில், உள்கட்டமைப்பும், வேளாண் பயிர்களும் பாதிக்கப்படுவதுடன் சில சமயம் உயிரிழப்புகளும் நேர்ந்துவருகின்றன.
Comments