லஞ்சம் பெற்ற புகாரில் பூதப்பாண்டி காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திங்கள் நகர் அருகே மைலோடு பகுதியை சேர்ந்த சுந்தராஜ் என்பவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணகுடி பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலப்பத்திரம் தொலைந்து போனதால், அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து புகாரின் பேரில் காவல் உதவி கண்காணிப்பாளர் நவீன் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானதால் சுந்தராஜை பணியிட நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
Comments