காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் வேகவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வேகவதி ஆற்றின் கரையை அகலப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 78 வீடுகளில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் 6 மாதங்களுக்கு முன்பே கீழ்கதிப்பூரில் மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் வீடுகளை காலி செய்யாமல் அவர்கள் அங்கேயே வசித்துவந்தனர். இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிக்கும் பணிகளை வருவாய்துறை அதிகாரிகள் தொடங்கினர்.
Comments