துணி உலர்த்த மாடிக்குச் சென்றபோது மின் கம்பியில் சிக்கிய மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...!

0 3311

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மின் கம்பியில் சிக்கி மின் தாக்குதலுக்குள்ளான மகனை காப்பாற்றச் சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வந்தவாசி மீரா காதர்ஷா தெருவை சேர்ந்த இப்ராஹிம்ஷா என்பவரது வீட்டின் மாடிப் பகுதிக்கு மிக நெருக்கமாக மின்வாரியத்துக்குச் சொந்தமான மின்கம்பி செல்கிறது.

காலை துணி உலர்த்துவதற்காக மாடிக்குச் சென்ற இப்ராஹிம்ஷாவின் மகன் அன்சாரி திடீரென கத்திக் கூச்சலிட்டுள்ளார். இப்ராஹிம்ஷா ஓடிச் சென்று பார்த்தபோது அன்சாரியின் கைகள் மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்தவாறு இருந்ததைக் கண்டு பதறி அவரைப் பிடித்து தள்ளிவிட முயன்றார் என்று கூறப்படுகிறது.

அப்போது இப்ராஹிம்ஷா உடலிலும் மின்சாரம் பாய்ந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அன்சாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments