ரஷ்யா முதலில் கைப்பற்றிய பக்முட் நகரை மீண்டும் தன்வசப்படுத்தும் உக்ரைன்...!

போரில் ரஷ்யா முதலில் கைப்பற்றிய பக்முட் நகரை மீட்கும் நடவடிக்கை தொடங்கிவிட்டதாக உக்ரைன் கூறியுள்ளது.
பக்முட் நகரை உக்ரைன் இராணுவம் நெருங்கி விட்டதாகவும், இதுவரை சுமார் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பகுதிகளை கைப்பற்றிவிட்டதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
70 ஆயிரம் பேர் வசித்து வந்த பக்முட் நகரம் ரஷ்யாவின் கோர தாண்டவத்தால் தற்போது உருக்குலைந்து கிடக்கும் நிலையில், பக்முட் நகர் மட்டுமின்றி கார்கீவ் உள்ளிட்ட ரஷ்ய ஆதிக்கத்தில் உள்ள தங்கள் நகரங்களையும் விரைந்து மீட்டெடுப்போம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
Comments