விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போராடி பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர் அல்காரஸ்

0 3357

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பலம் வாய்ந்த செர்பிய வீரரான ஜோகோவிச்சை எதிர்கொண்ட 20 வயதுடைய அல்காரஸ் முதல் செட்டில் தோல்வியடைந்தார். பின்னர் சுதாரித்து கொண்டு விளையாடிய அவர் 2 மற்றும் 3-வது செட்களை கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு சவால் விடுத்தார்.

ஆனால் 4-வது செட்டை ஜோகோவிச் கைப்பற்ற, ஆட்டத்தில் அனல் பறந்தது. கடைசி செட் யாருக்கு என்ற நோக்கில் களம் கண்ட இருவரும் சம அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .

ஆனால் அல்காரஸ் தனது இளமை துடிப்புடன் ஆட்டத்தை  வெளிக்காட்டி கடைசி செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றும் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

அல்காரஸ் விம்பிள்டன் பட்டம் வெல்லும் 3-வது ஸ்பெயின் வீரர் ஆவார் .முன்னதாக 1966-ல் மனோலோ சந்தனா மற்றும் 2008-2010-ல்  நடால் ஆகியோர் விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments