மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான கட்டணத்தை அதிகபட்சம் 50 சதவீதம் குறைத்தது தமிழ்நாடு மின்சார வாரியம்...!

மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான மின் கட்டணம் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பசுமைக் கட்டணக் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பீக் ஹவர்ஸ் எனப்படும் மின்சார பயன்பாடு அதிகம் உள்ள நேரம் வெவ்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டு, பயன்பாட்டு நேரத்திற்கு தகுந்தாற்போல் யூனிட்டிற்கு 6 ரூபாய், ஏழு ரூபாய் 50 காசு மற்றும் 9 ரூபாயாக வசூலிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜிங் நிலையத்திற்கான மாதாந்திர நிலை கட்டணமும் சராசரியாக 25 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த கட்டண குறைப்பு சார்ஜிங் நிலையங்களுக்கு மட்டுமானது எனவும், நுகர்வோர்களுக்கான கட்டணத்தை சார்ஜிங் நிலையங்களே நிர்ணயிக்கும் எனவும் மின்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Comments