சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர ரவுடிக்கு காலம் தந்த தண்டனை..! காணாப் பிணமான பரிதாபம்

0 3856

கொலை செய்வதில் யார் கில்லி என்ற தகராறில் ரவுடியை கொலை செய்து புதர்மண்டிய பாழுங்கிணற்றில் வீசிய குடிகார கூட்டாளிகளை 6 மாதம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். போதையில் உளறி போலீசில் சிக்கிக் கொண்ட சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

3 கொலை.. 2 கொள்ளை... 10 அடிதடி வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்ட ரவுடி சீமானை அடித்து கொலைசெய்து காணாப் பிணமாக்கியதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்கெட்ச் சஞ்சீவி இவர் தான்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் வடக்கு தெருவை சேர்ந்த குண்டாஸ் ரவுடி பாலமுருகனின் மகன் சீமான். பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஊதாரியாக சுற்றித்திரிந்த சீமான் மீது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றது, உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் தங்கள் மகன் சீமானை காணவில்லை என அவரது பெற்றோர்கள் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய கண்டமனூர் சப் இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன் தலைமையிலான போலீசார், சீமான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் போலீசுக்கு பயந்து அவன் தலைமறைவாகி இருக்கலாம் என்று வழக்கை கிடப்பில் போட்டனர்

கடந்த ஆறு மாதங்களாக சீமான் மாயமான மர்மம் விலகாத நிலையில், சீமானின் கூட்டாளிகளில் ஒருவனான சஞ்சீவி குமார் மதுபோதையில் தன்னை ரவுடி என்று மார்தட்டிக் கொண்டு, சீமானையே பீர் பாட்டிலால் தட்டி கண்டமனூர் அருகே வேலாயுதபுரம் பகுதியில் உள்ள புதர் மண்டிய கிணற்றில் வீசியதாக உளறியுள்ளான். இதையடுத்து அவனை அழைத்து விசாரித்த போலீசாரிடம் , சீமானின் சடலத்தை வீசிய கிணற்றை அடையாளம் காட்டினான் சஞ்சீவி.

பார்ப்பதற்கு புதர்போல காணப்பட்ட செடிகளை ஜே.சி.பி மூலம் அகற்றிய போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் , அந்த கிணற்றிலிருந்து, சீமானின் எலும்புகளை மீட்டு மூட்டை கட்டி வெளியே எடுத்து வந்தனர்.

கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் சீமான் உடையது தானா ? என்பதை கண்டறிய அந்த எலும்புகளை , அவனது தந்தை பாலமுருகனின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்வதற்காக போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீமான் மாயமான வழக்கை , கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் அவரை கொலை செய்ததாக கூட்டாளிகள் 4 பேரை கைது செய்தனர். சம்பவத்தன்று நண்பர்களுடன் மது அருந்திய போது, கொலை செய்வதில் கில்லி யார் ? என்று தகராறு ஏற்பட்டுள்ளது. மது போதையில் சக நண்பர்களை சீமான் தாக்கியதால் உண்டான ஆத்திரத்தில் பீர்பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்து அவரது சடலத்தை கிணற்றில் வீசியதாக போலீசில் வாக்குமூலம் அளித்தனர்

போதையால் ஒருவரை கொலை செய்துவிட்டு, சடலத்தை மறைத்த நிலையில், அதே போதையால் உளறி போலீசாரிடம் மாட்டிக் கொண்டது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments