அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் முடக்கம் - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தற்போதைய ஆட்சியாளர்கள் முடக்குவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகையில் கட்சிக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய அவர், மேட்டூர் அணை நிரம்பி மழைக்காலங்களில் உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க நீரேற்று நிலையம் மூலம் தண்ணீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
இந்த திட்டத்தை நிறுத்தி வைக்காமல் தொடர்ந்திருந்தால் தற்போது 100 ஏரிகள் நிரம்பி இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஏழைகள் சிகிச்சை பெற்ற அம்மா கிளினிக் திட்டத்தை காழ்ப்புணர்ச்சியோடு மூடிவிட்டதாகவும் அம்மா உணவகம் திட்டத்தை சீரழித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அதிமுக ஆட்சியில் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் பலருக்கு அத்தொகையை நிறுத்திவிட்டனர் என்றும் குற்றம்சாட்டினார்.
Comments