மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் மணிப்பூர் முதலமைச்சர்

0 1618
மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் மணிப்பூர் முதலமைச்சர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங், மாநில சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அம்மாநிலத்தில், 50 நாட்களுக்கு மேலாக நீடித்த வன்முறை மற்றும் மோதல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏற்கனவே மணிப்பூர் நிலவரம் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதலமைச்சர் பைரன் சிங்கை நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி பிரநிதிகள் வலியுறுத்தினர். மேலும் அனைத்து கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதனிடையே, மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க இணைய சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments