இஸ்ரேல் தாக்குதலுக்கு பழிவாங்க பாலஸ்தீனர் சுட்டதில் 4 யூதர்கள் பலி..!

0 1358

பாலஸ்தீன நகரான ரமல்லாவுக்கு கிழக்கே யூதக் குடியிருப்பு அருகே பாலஸ்தீனர் ஒருவர் நடத்திய தாக்குதலில் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்குள் புகுந்த அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

இதில் யூதர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். உடனே அங்கிருந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அந்நபரை சுற்றி வளைத்து சுட்டு வீழ்த்தினர்.

இரு தினங்களுக்கு முன்பு மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பழிவாங்கும் வகையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments