இந்த 10 இடத்தில் தான் இருக்கு ஸ்பீடு ரேடார் கன்.... வாகன ஓட்டிகளே உஷார்.... பகலில் 40...! இரவில் 50..!
சென்னையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களின் வேகத்தை அளவிட்டு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் காமிராவுடன் கூடிய 'ஸ்பீடு ரேடார் கன்' பொருத்தப்பட்டுள்ள அந்த 10 இடங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...
சென்னையில் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் சென்றால் என்ன மாதிரி இருக்கும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி..!
சென்னை நகரில் மோட்டார் வாகனச் சட்டப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சராசரியாக 40 கிலோமீட்டர் வேகமும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கிலோமீட்டர் வேகமும் அனுமதிக்கப்பட்டவை எனவும், நிர்ணயிக்கப்பட்ட இந்த வேகத்தை கடந்தால் ஸ்பீட் ரேடார் கன் என்னும் தொழில்நுட்பக் கருவிகள் தானியங்கி முறையில் விதி மீறிய வாகன ஓட்டிக்கு தானியங்கி அபராதம் விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி 10 இடங்களில் இந்த ஸ்பீட் ரேடார் கன் எனும் இந்த கருவி ஏ.என்.பி.ஆர் கேமராவுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது. அண்ணா சாலை ஸ்பென்சர்...
தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில்...
ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை சந்திப்பு..
மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் எதிரில்...
கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் ...
அரசு மருத்துவமனை அருகே பாரிமுனை
சேத்துப்பட்டு டெய்லர்ஸ் சாலை சந்திப்பு அருகே
அமைந்தகரை புல்லா அவென்யூ...
திருமங்கலம் எஸ்டேட் சாலை...
பாரிமுனை சந்திப்பு...
மதுரவாயல் ரேஷன் கடை அருகில் இந்த கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக 20 இடங்களில் இந்த நவீன கமிராவை அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. இந்த நடைமுறைக்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர், கால் டாக்ஸி, இருசக்கர வாகன ஓட்டிகள், லாரி உரிமையாளர்கள் என கடும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் என்றும் போக்குவரத்து நெரிசல் குறைந்த இடத்தில் ஊர்வலம் போல செல்வதால் எரிபொருள் வீணாகும் என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
ஸ்பீடு ரேடார் கன் தொழில் நுட்பம் அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும், இவற்றை தொடர்ந்து பராமரிக்க தவறினால் தவறான அளவீடுகளை வழங்கும், இதனால் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வீண் தகராறு ஏற்படும் என்றும் தெரிவித்தார் பொது போக்குவரத்து நிபுணர் வளவன் அமுதன்.
வாகன ஓட்டிகளிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இந்த தானியங்கி அபராத முறைக்கான வேக அளவை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதுவரை அந்த கருவியில் பதிவாகும் அபராத ரசீது வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்று பெருநகர சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்
Comments