செந்தில் பாலாஜி கைது விவகாரம் : இரட்டை வேடம் போடுகிறார் தமிழக முதலமைச்சர் : ராஜ்நாத் சிங் கடும் விமர்சனம்

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினார்.
சென்னை தாம்பரத்தில் பா.ஜ.க. 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த போது அவர் மீது பக்கம்பக்கமாக குற்றப்பத்திரிக்கை படித்து கைது செய்ய வலியுறுத்திய மு.க. ஸ்டாலின், தற்போது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று கூறி வருவதாக சுட்டிக்காட்டினார்.
தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடப்பதை நாடே பார்ப்பதாகவும் அவர் கூறினார். தமிழகம் மட்டுமே அறிந்த செங்கோலின் பெருமையை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தியவர் பிரதமர் மோடி என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. நீடிப்பதாகவும் கூறினார். பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Comments