அதிகாலை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

செந்தில் பாலாஜிக்கு புதன் கிழமை அதிகாலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை மருத்துவர்கள் தயார் செய்திருப்பதாக தெரிவித்தார்.
மழை பாதிப்புகள் பற்றி பேசிய அமைச்சர், சென்னையில் ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை வந்தாலும் அதை தாங்கக் கூடிய அளவில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த ஆண்டு மட்டும் 200 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பெரியளவுக்கு மழை வந்தாலும் சென்னையில் உள்ள சுரங்கங்களில் மழை நீர் தேங்காது என்றும் தெரிவித்தார்.
Comments