விரட்டிய 3 தெரு நாய்கள்.. சிறுமியை குதறிய கொடுமை.. தாய் வராவிட்டால் நிலைமை மோசம்..!

0 2051

விளையாடிவிட்டு வீட்டுக்குள் வந்த சிறுமியை 3 தெரு நாய்கள் விரட்டி வந்து ஒன்று சேர்ந்து கடித்து குதறிய பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிறுமி ஒருவரை 3 நாய்கள் விரட்டிச்சென்று கடித்து குதறிய பதைதைக்க வைக்கும் சம்பவம் மீண்டும் கேரளாவை உலுக்கி உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட முலப் இனங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரது மகள் ஷாலினி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் தனது வீட்டு பின்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்று தெரு நாய்கள் விரட்டி வந்துள்ளன. அவற்றை கண்டு அஞ்சி வீட்டுக்குள் ஓடி வந்த சிறுமியை 3 நாய்களும் சுற்றி வளைத்து கொடூரமாக கடித்து குதறின.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரர் சுவர் ஏறிக்குதித்து காப்பாற்ற முயன்றார். அதற்குள்ளாக சிறுமியின் தாய் ஓடி வந்து நாய்களை விரட்டி விட்டு சிறுமியை மீட்டார்

மீண்டும் நாய்கள் அவர்களை தாக்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் எதிர்வீட்டுக்காரர் சுவர் ஏறிக்குதித்தார். அவரை கண்ட நாய்கள் அங்கிருந்து ஓடிச் சென்றுவிட்டன.

நாய்களிடம் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாற்றுத்திறனாளி ஆன சிறுவன் தெரு நாய்களால் கடித்து தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது. அங்கு தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments